கோவில்பட்டியில் விபத்து: பள்ளி ஆசிரியை-மகள் உயிரிழப்பு

கோவில்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று (ஜூன் 18) மாலை பசுவந்தனை சாலையில் நடந்த விபத்தில் பள்ளிக்கூட ஆசிரியை மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்தனர்,
இது பற்றிய விவரம் வருமாறு:-

கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச்சேர்ந்தவர் ரமேஷ்(வயது (44) அவரது மனைவி வளர்மதி(37) மகள் அஷ்விகா(9). வளர்மதி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்,. அதே பள்ளியில் மகள் அஷ்விகா நான்காம் வகுப்பு படித்து வந்தார்,
இன்று மாலை ரமேஷ் தனது மனைவி மற்றும் மகளை தனது ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றார், பசுவந்தனை சாலையில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அப்போது கோவில்பட்டியில் இருந்து முடுக்கலான்குளம் சென்ற அரசு பஸ், ரமேஷ் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது,’
இதில் ஸ்கூட்டர் கீழே சாய்ந்து விழுந்த வளர்மதி மற்றும் சிறுமி அஷ்மிதா இருவரும் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் படுகாயம் அடைந்த ரமேஷ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்,. தகவல் அறிந்து விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார், விபத்தில் இறந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.







