கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில் பட்டாசு ஆலை தொடங்க அனுமதி வழங்கினால் மறியல்.; தமிழ் மாநில காங்கிரஸ் அறிவிப்பு
கோவில்பட்டி மற்றும் எட்டயபுரம் பகுதியில் புதிதாக் பட்டாசு அலை தொடங்க அனுமதி அளித்தால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது,
கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை நடந்த : ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத.மா.கா. தலைவர் தலைவர் என்.பி,.. ராஜகோபால் தலைமை தாங்கினார் வட்டாரத் தலைவர் கனி ராஜ் கயத்தார் வட்டாரத் தலைவர் பூல் பாண்டியன் மாவட்டத் துணைத் தலைவர் பி முத்துசாமி திருமுருகன் மாவட்ட பொதுச்செயலாளர் அய்யாதுரை விஎஸ்ஏ சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அழகுசுப்பு துணை செயலாளர்கள் மணிமாறன் சரவணன் செந்தூர்பாண்டியன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் சச்சின் பாலா மற்றும் : கடைசல் பூமி தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சார் ஆட்சியரை சந்தித்து அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:-
கோவில்பட்டி மற்றும் எட்டயபுரம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் புதிய பட்டாசு ஆலை தொடங்குவதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் சுமார் 10 தொழிற்சாலைகளுக்கு மட்டும் அரசின் தடையில்லா சான்று வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் பட்டாசு ஆலைக்கான கட்டிடங்களை கட்டியுள்ளனர்.
ஆனால், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பட்டாசு ஆலையை நடத்துவதற்கான அனுமதியும், பட்டாசு தயாரிக்க தேவைப்படும் கந்தகத்தை பயன்படுத்துவதற்கான உரிமமும் வழங்கப்படவில்லை. இதற்காக பட்டாசு ஆலை அமைக்க உள்ள உரிமையாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே சிவகாசி, சாத்தூர் பகுதியை மயான பூமியாக்கிவிட்டு விருதுநகர் மாவட்ட நுழைவாயிலான, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம் பகுதிக்குள் பட்டாசு ஆலைகளும், அதன் உரிமையாளர்களும் வருகின்றனர். இது விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் மிகவும் ஆபத்தானது. மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு கேள்விக்குறியாகிவிடும் அபாய நிலையும் எழுந்துள்ளது.

விவசாய பூமியான கோவில்பட்டி மற்றும் எட்டயபுரம் பகுதிகளில் பட்டாசு ஆலைகளை நடத்த அனுமதி கொடுத்து, விவசாய பூமியை மயான பூமியாக மாற்றிவிடாதீர்கள் என விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, கோவில்பட்டி மற்றும் எட்டயபுரம் வட்டத்தில் மானாவாரி விவசாயத்தையும், கிராம மக்களையும் பாதிக்கும் பட்டாசு உற்பத்தி ஆலைகளை அனுமதிக்கக்கூடாது. மக்களின் எதிர்ப்பை மீறி பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கினால், மதுரை – தூத்துக்குடி தேசிய நான்கு வழிச்சாலையில் விவசாயிகள், கிராம மக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.







