இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2025–2026 கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

விழுதுகள் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொருளாளர் ஜெயபாரதி வரவேற்று பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் மரியசெல்வி தலைமை தாங்கி, பேசினார்,
ஆஸ்கார் மற்றும் விவிஜே கேட்டரிங் கல்லூரி கல்விக்குழுமத் தலைவர் சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அதனைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஓசூர் லயன்ஸ் கிளப் தலைவர் குருசாமி பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டி, பேசினார்.

இவ்விழாவில் பெற்றோர்கள், ஊர்ப்பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர் விழுதுகள் முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளர் தங்கமாரியப்பன் நன்றி கூறினார்,







