கோவில்பட்டியில் சாலை விபத்துகளை தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தகோரி ஆர்ப்பாட்டம்; சார் ஆட்சியரிடம் மனு

கோவில்பட்டியில் சாலை விபத்துக்களை தடுத்திட அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீற்படுத்திட கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது,

ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் , செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, ஞானம், வினோபா, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் மாநில துணைத்தலைவர் அபிராமி முருகன், மாநில குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிரிஸ்டோபர், தொழிலதிபர் ஷாம் சுந்தர், மக்கள் நீதி மய்யம் ரமேஷ், ராதாகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், பகத்சிங் ரத்ததான கழகம் மா. காளிதாஸ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகன், உலக திருக்குறள் கூட்டமைப்பு முத்துச்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாக்கியராஜ், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சார் சட்சிய்ரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
*சாலையோர ஆக்கிரமிப்புகளை முறைபடுத்த வேண்டும்.
*சாலையின் இருமருங்கிலும் வெள்ளை கோடிட்டு அதை தாண்டி வாகனங்கள் வராமல் நிறுத்தச் செய்ய வேண்டும்.\
*விபத்துக்களை ஏற்படுத்தும் பழுதான அரசு பேருந்துகளை பழுதுநீக்கி இயக்கவேண்டும்.
*நகர எல்லைக்குள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக செல்லும் சிற்றுந்துகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
*பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உரிய காவலர்களை நியமிக்கவேண்டும்.
*இருசக்கர வாகனங்களில் மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் இரண்டு பேருக்கு மேல் செல்வதை தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்யவேண்டும் இதனை போக்குவரத்து காவலர்கள் உரிய முறையில் கண்காணிக்கவேண்டும்.

*கோவில்பட்டியில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வாகனங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போக்குவரத்து காவலர்களை அதிகப்படுத்தவேண்டும்.
*நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, சிற்றுந்து மற்றும் பேருந்து உரிமையாளர்கள் அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டு கூட்டத்தை சார் ஆட்சியர் நடத்தி விபத்துக்களை தடுத்திட உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும்.
மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது,.







