கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் தேசிய வாசிப்பு தினம்
கல்வியையும் வாசிப்பு பழக்கத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல அரும்பாடுபட்ட கேரள மாநிலத்தின் நூலக தந்தை என அழைக்கப்படும் பி. என்.பணிக்கரின் நினைவு தினமான ஜூன் 19 ம் தேதி தேசிய வாசிப்பு தினமாக 1996ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது

தேசிய வாசிப்பு தினம் மக்களிடம் வாசிப்பழக்கத்தை அதிகரிக்கவும்,நூலகங்களின் பயன்பாடு மற்றும் புத்தகங்களின் அவசியத்தை உணர்த்துவது,கல்வி மற்றும் எழுத்தறிவை மேம்படுத்துவது,வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பித்திடவும் ஜூன் 19 முதல் 25 வரை தேசிய வாசிப்பு வாரமாகவும் கடைபிடிக்கப்படுகிறது
கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார்.ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் முத்து செல்வம்,பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளி நூலகத்தில் உள்ள தான் விரும்பிய புத்தகங்களை எடுத்து வாசிக்கும் பழக்கத்தை மேற்கொண்டனர்.

ஆசிரியர்கள் பொன்மலர்பாரதி, பிருந்தாதேவி,பொற்செல்வி உட்பட மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.\
தொடக்கத்தில் ஆசிரியை மீனா வரவேற்றார்.முடிவில் ஆசிரியர் பாலாஜி நன்றி கூறினார்.







