கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் யோகா நிகழ்ச்சி

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி உடற்கல்வித் துறை சார்பில் சர்வதேச யோகா தின விழா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஆர். செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் கே, கண்ணன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மூன்றாம் ஆண்டு உடற்கல்வி மாணவர் கட்டபொம்மன் வரவேற்புரையாற்றினார்.

மூன்றாம் ஆண்டு உடற்கல்வி மாணவர் ராகவின், யோகாவின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு யோகா பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கங்களை நடத்தி காட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாணவர் மரியா சவரி பெர்னிட் நன்றி கூறினார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.








