தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக, காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி அமைத்ததை விரும்பாமல் மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றன. தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜன் மற்றும் முரளிதரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழ்ச்சியில், 40-வது வார்டு காங்கிரஸ் தலைவர் ஜோ. பர்னாந்து, மிக்கேல் ரெஜினா, ஈஸ்வரி, வழக்கறிஞர் […]
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 52), லாரி டிரைவர். இவருடைய மனைவி வசந்தா. இவருடைய பெயரில் உள்ள பூர்வீகச் சொத்தில், வசந்தாவின் அண்ணனும் உப்பளத் தொழிலாளியுமான காசி (50) என்பவர், தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 15.6.2020 அன்று காசி மற்றும் அவரது மகன் சதீஷ்குமார் ஆகியோர் முத்தையாபுரம் நேசமணி நகர் பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தட்சிணாமூர்த்தி, அவரது […]
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா? இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்-அமைச்சர் தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப்படுகிறார். இவர்அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? […]
கோவில்பட்டியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம், மாசு கட்டுப்பாட்டு தினம், உலக மிதிவண்டி தினம் கொண்டாடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்., கோவில்பட்டி பசுமை-தூய்மை இயக்கத்தின் தலைவர் I. ரவிமாணிக்கம் முன்னிலை வகித்தார். ஜூன் மாதம் 5 ம் தேதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்துவது, கோவில்பட்டி காவல் துறை துணை […]
கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு செல்லும் சாலை சமீபத்தில் பெய்த மழை காரணமாகவும், நகராட்சி குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் போது தோண்டப்பட்டதாலும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் உள்ளது. இதனை கண்டித்தும், உடனடியாக சாலையை செப்பனிட வலியுறுத்தியும், தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் தமிழரசன் தலைமையில் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. .ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், […]
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்திருக்கிறார். திருச்சி கிழக்கு தொகுதி தற்போது காலியாக இருந்தாலும், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று மதியம் தனி விமானத்தில் திருச்சி வந்தார். அவரை, விமான […]
கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 100-வது மாதக் கூட்டம், சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மன்றத்தின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீவெங்கடேஷ் தலைமை தாங்கினார். மன்ற நிறுவனர் டாக்டர் லதா மற்றும் மன்ற இயக்குனர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி லக்குமி ஆலை மேல் நிலைப் பள்ளி இசை ஆசிரியை அமிர்த வர்ஷினி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். மன்றக் காப்பாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். தமிழுக்கு தொடர்ந்து தொண்டு செய்துவரும், என்.சுப்பையாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளி […]
என் மீதான பாலியல் புகார் குற்றச்சாட்டுபொய்யானது; போலீஸ் இன்ஸ்பெக்டர் திலீபன் உருக்கமான வீடியோ
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் திலீபன். இவர் அங்கு பணியாற்றிய, தற்போது சிங்கப்பெண் அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ள பெண் காவலர் ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு மற்றும் மன உளைச்சல் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து தட்டிக்கேட்ட அந்தப் பெண் காவலரின் கணவரை, அனைவர் முன்னிலையிலும் தனது துப்பாக்கியை மார்பில் வைத்துச் சுட்டுவிடுவதாகக் கூறி இன்ஸ்பெக்டர் திலீபன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தனியார் டி . வி.செய்திச் சேனல், மற்றும் சில […]
கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் கணேசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா கோவில்பட்டி தங்க மஹாலில் நடந்தது. இடைசெவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விற்பனையாளர் பணி முதல் செயலர் பணி வரை 39 ஆண்டுகள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற கணேசனுக்கு பணி நிறைவு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்டத் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகப் பகுதியில் காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா நேற்று (31.05.2026) ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் திறந்து வைத்தார். பின்னர் புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள CCTV கேமராக்களின் கண்காணிப்பு திரையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் செல்வராஜ், குரு வெங்கட்ராஜ் […]







