திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு
Oplus_16908288
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகப் பகுதியில் காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது

புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா நேற்று (31.05.2026) ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் திறந்து வைத்தார்.
பின்னர் புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள CCTV கேமராக்களின் கண்காணிப்பு திரையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் செல்வராஜ், குரு வெங்கட்ராஜ் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் இணை ஆணையர் ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.







