கோவில்பட்டி அறிஞர் சங்கரவள்ளிநாயகம் நினைவேந்தல் கூட்டம்

கோவில்பட்டி அறிஞர் தமிழறிஞர் சங்கரவள்ளிநாயகம் நினைவுநாளை முன்னிட்டு நினைவேந்தல் கூட்டம் அறக்கட்டளை தலைவர் திருமலை முத்துச்சாமி தலைமையில் கி.ராஜநாராயணன் மணிமண்டபத்தில் நடைபெற்றது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் முன்னிலை வகித்தார். இளையரசனேந்தல் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியை முருகசரஸ்வதி வரவேற்று பேசினார்.
தமிழறிஞர் சங்கரவள்ளிநாயகம் உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது. எழுத்தாளர் திருநாவுக்கரசர் புத்தகங்களை திறனாய்வு செய்தார். அரசு பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்தபாண்டி, செயலர் ,நம்.சீனிவாசன், இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழக மாநில துணைத் தலைவர் அபிராமி முருகன், இளந்தமிழர் கலை இலக்கிய பேரவை செயலர் பிரபு, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் சுபேதார் கருப்பசாமி, நல்லையா, மாரிமுத்து குமார், நாஞ்சில் குமார், வினோபா, ராமலட்சுமி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து செல்வம், முத்து முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







