இடைசெவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் கணேசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா கோவில்பட்டி தங்க மஹாலில் நடந்தது.

இடைசெவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விற்பனையாளர் பணி முதல் செயலர் பணி வரை 39 ஆண்டுகள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற கணேசனுக்கு பணி நிறைவு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
மாவட்டத் துணைத் தலைவர் வேல்ராஜ்,பொருளாளர் தம்பிராஜ்,மாவட்ட இணை செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க கௌரவ பொது செயலாளர் ஜேசுராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற கணேசனுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

முடிவில் பணி நிறைவு பெற்ற இடை செவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கணேசன் ஏற்புரை வழங்கினார்.







