கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்திடகோரி நகராட்சி தலைவரிடம் மனு
கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு செல்லும் சாலை சமீபத்தில் பெய்த மழை காரணமாகவும், நகராட்சி குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் போது தோண்டப்பட்டதாலும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் உள்ளது.

இதனை கண்டித்தும், உடனடியாக சாலையை செப்பனிட வலியுறுத்தியும், தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் தமிழரசன் தலைமையில் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
.ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, வினோபா, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிகுமார், மந்தித்தோப்பு ரோடு வியாபாரிகள் சங்கச் செயலாளர் சங்கரக்குமார், பொருளாளர் பாஸ்கர், இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழக மாநில துணை தலைவர் அபிராமி முருகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராமலட்சுமி, சங்கர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு ஒருங்கிணையப்பாளர் மேரி ஷீலா, மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகன், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








