ஜூன் 5 சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் கொண்டாட ஆலோசனை கூட்டம்
Oplus_16908288
கோவில்பட்டியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம், மாசு கட்டுப்பாட்டு தினம், உலக மிதிவண்டி தினம் கொண்டாடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது

கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர்
இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்., கோவில்பட்டி பசுமை-தூய்மை இயக்கத்தின் தலைவர் I. ரவிமாணிக்கம் முன்னிலை வகித்தார்.
ஜூன் மாதம் 5 ம் தேதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்துவது, கோவில்பட்டி காவல் துறை துணை கண்காணிப்பாளர்
ஜெகநாதன் பேரணியை துவக்கி வைக்க அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கோவில்பட்டி பசுமை தூய்மை இயக்கத்தின் செயலாளர் ஆசியா பார்ம்ஸ் பாபு, துணை செயலாளர் அபிராமி முருகன், துணை தலைவர் க . தமிழரசன், அகில இந்திய கட்டுநர் சங்க நிர்வாகிகள் பார்வதி ராஜா, அருள்ராஜா, வணிகர் சங்க நிர்வாகிகள் மருத்துவர் சிவா, சரமாரி ராஜா அன்பு மரியாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







