கோவில்பட்டி மகிழ்வோர் மன்ற கூட்டம்: கவிஞர் சிவானந்தம் எழுதிய புத்தகத்தை தமிழருவி மணியன் வெளியிட்டார்
கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 100-வது மாதக் கூட்டம், சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மன்றத்தின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீவெங்கடேஷ் தலைமை தாங்கினார். மன்ற நிறுவனர் டாக்டர் லதா மற்றும் மன்ற இயக்குனர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி லக்குமி ஆலை மேல் நிலைப் பள்ளி இசை ஆசிரியை அமிர்த வர்ஷினி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். மன்றக் காப்பாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

தமிழுக்கு தொடர்ந்து தொண்டு செய்துவரும், என்.சுப்பையாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளி தமிழாசிரியர் ராஜசேகருக்கு ‘இளங்கோவடிகள்’ விருது, சிப்பிப்பாறை அரசு மேல் நிலைப் பள்ளி தமிழாசிரியர் ஜான்சிராணிக்கு ‘தொல்காப்பியர்’ விருது வழங்கி பாராட்டப்பட்டது.
கண் டாக்டர் மீனாட்சி சுந்தரதுக்கு ‘மனித நேய மருத்துவர்’ விருது வழங்கப்பட்டது.
நடந்து முடிந்த 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவில்பட்டிக் கல்வி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற கவுணியன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவி விசாலியை பாராட்டி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் மதுரை நகைச்சுவை மன்றம், திருச்சி நகைச்சுவை மன்றம், கோவை நகைச்சுவை சங்கம் மற்றும் ராஜபாளையம் நகைச்சுவை மன்றம் ஆகியவற்றை பாராட்டி ‘நலம் காக்கும் நகைச்சுவை மன்றம்*லா என்னும் விருது விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து கவிஞர் *சிவானந்தம்* எழுதிய ‘இத்னுண்டு கதைகள் 200’ என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர் தமிழருவி மணியன் வெளியிட முதல் பிரதியை டாக்டர் ஸ்ரீவெங்கடேஷ் பெற்றுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, தமிழருவி மணியன, ‘காவியத்தாயின் இளைய மகன்’ என்னும் தலைப்பில் உரையாற்றினார்
முடிவில் மன்றக் காப்பாளர் சேர்மத்துரை நன்றி கூறினார்.

கூட்டத்தில் மன்ற இயக்குனர் ஜான்கணேஷ், மன்ற காப்பாளர்கள் துரைராஜ், செல்வின், கோவில்பட்டி கம்பன் கழக துணைத் தலைவர் ராஜாமணி, செயலாளர் சரவனச்செல்வன், கழுகுமலை திருவள்ளுவர் மன்ற தலைவர் பொன்ராஜ் பாண்டியன், செயலர் முருகன், எஸ் எஸ் டி எம். கல்லூரி முதல்வர் செல்வராஜ், நாடார் காமராஜ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி முதல்வர் பிரபு, கோவில்பட்டி இசை எப் எம் இயக்குனர் சுரேஷ் குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.







