தமிழக முதல் அமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக பாடப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இந்திய… கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்த்தாய் பாடல் 3-வதாக பாடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியதாவது:- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப் பெரும் கட்சியாக வந்த தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் […]
அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் மாநில செயற்குழு கூட்டம்; 50க்கும் மேற்பட்ட வானவியல் ஆர்வலர்கள்
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி,கல்லூரி மாணவர்கள், மற்றும் பொது மக்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை எளிய முறையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புகள் மூலம் பரப்புரை செய்து வருகிறது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் (TASS)மாநில செயற்குழு கூட்டம் 2 நாட்கள் மதுரையில் நடந்தது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட வானவியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. […]
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் விஜய் மக்கள் மத்தியில் பேசியதாவது; ”என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம். சினிமாவில் கஷ்டப்பட்டு வெற்றி பெற வேண்டுமென இருந்த சாதாரண உதவி இயக்குநருக்கு பிறந்த பிள்ளைதான் நான். வறுமை, பசி எனக்கு தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் கிடையாது. உங்களில் ஒருவன். உங்கள் பிள்ளை, உங்கள் அண்ணன், உங்கள் தம்பி மாதிரி தான் நான் உணர்கிறேன். நீங்களும் அப்படி நினைப்பதால் தான் […]
தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார் விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கும் விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்திற்கு வருகை தந்த கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை பொன்னாடை போர்த்தி விஜய் வரவேற்றார்… விழாவில், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கூட்டணி தலைவர்கள், .. அமைச்சர்கள், விஜய்யின் பெற்றோர், […]
சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; அமமுக எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை என கவர்னரிடம் நேற்று புகார் அளித்து இருந்தேன். அத்துடன், தவெக குதிரை பேரம் நடத்துகிறது என்றும் கவர்னரிடம் தெரிவித்தேன். ஆனால் காமராஜ் கையெழுத்திட்டதாக கூறும் அசல் கடிதம் எங்கே? காரில் அமர்ந்து கையெழுத்திட்டது போன்ற வீடியோவை எடுத்தது யார்? திமிரிலும், வன்மத்துடனும் தவெகவினர் வீடியோ வெளியிட்டுள்ளனர். எனது கட்சி எம்.எல்.ஏ. ஆதரவு அளித்திருந்தால் அவரை கவர்னர் மாளிகைக்கு […]
ஆதரவு கடிதத்தில் அ.ம.மு.க. எம்.எல்.ஏ. கையெழுத்திட்ட வீடியோ வெளியீடு; டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டுக்கு
தமிழக அரசியலில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை (118) நிரூபிக்க வேண்டிய சூழலில், இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் அக்கட்சி தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், த.வெ.க.வுக்கு 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. இதனால், 113 […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ‘Touchmark Descience’ நிறுவனத்தின் DOS கிளப் இணைந்து, மாணவர்களின் புதுமைத்திறன் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வெளிக் கொண்டு வரும் நோக்கில், மினி ஹேக்கத்தான் போட்டியை நடத்தின. மினி ஹேக்கத்தான் என்பது நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தமிழ் மொழியை மேம்படுத்தவும் புதிய படைப்புகளை உருவாக்கவும்,நடத்தப்படும் தமிழி மொழிநுட்ப நிரலாக்கப் போட்டி என்பதாகும் இப்போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு .கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனைப்படி கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்,.. உதவிப் பேராசிரியர் […]
கோவில்பட்டியில் தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள அண்ணாமலை ரெட்டியார் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது அய்யாத்துரைப்பாண்டியர் பிறந்தநாளை முன்னிட்டு தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனத்தலைவர் வெயிலு முத்துபாண்டியன் தலைமை தாங்கி, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர் முத்துராமலிங்கம், ஒருங்கிணைப்பாளர் குட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மேற்பார்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மந்திதோப்பு – பாண்டவர்மங்கலம் ரோடு ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கைகையில் ஈடுபட்டிருந்னர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அவர் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த திருப்பதி (வயது 50) என்பதும் அவர் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.உடனடியாக போலீசார் , திருப்பதி என்பவரை கைது […]
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மேற்பார்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர். நவநீதகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் . சண்முகம் மற்றும் போலீசார் கோவில்பட்டி ஸ்ரீராம்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இருளப்பசாமி (52), மணிகண்டன் (50) மற்றும் மனோஜ் (23) ஆகியோர் என்பதும், அவர்கள் […]







