கோவில்பட்டி கல்லூரியில் மினி ஹேக்கத்தான் போட்டி
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ‘Touchmark Descience’ நிறுவனத்தின் DOS கிளப் இணைந்து, மாணவர்களின் புதுமைத்திறன் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வெளிக் கொண்டு வரும் நோக்கில், மினி ஹேக்கத்தான் போட்டியை நடத்தின.
மினி ஹேக்கத்தான் என்பது நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தமிழ் மொழியை மேம்படுத்தவும் புதிய படைப்புகளை உருவாக்கவும்,நடத்தப்படும் தமிழி மொழிநுட்ப நிரலாக்கப் போட்டி என்பதாகும்

இப்போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு .கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனைப்படி கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்,.. உதவிப் பேராசிரியர் மகாராஜன் முன்னிலை வகித்தார். Touchmark Descience’, சென்னை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாரதிராஜா தங்கப்பழம், திட்ட வெற்றி மேலாளர் அறியப்பன், தலைமை தொழில்நுட்ப அதிகாரி மோகன்ராஜ் மற்றும் Origin BI Mindworks, பிரைவேட் லிமிடெட், சென்னை துணைத்தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஹேக்கத்தான் மென்பொருள் வடிவமைப்பு பற்றி விரிவாக விளக்கி கூறினார்கள்.’
.இந்தப் போட்டியில் தேர்வாகும் மாணவர்கள் 2026 ஜூலை மாதம் கோவையில் நடைபெற உள்ள “Mini Hackathon” போட்டியில் கலந்து கொள்வார்கள். அதில் தேர்வாகும் மாணவர்கள், முதலீட்டாளர்களை சந்தித்து தங்களின் புதுமை யோசனைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்புடன், சிங்கப்பூருக்கு இலவச கல்வி மற்றும் தொழில்நுட்ப பயணத்தில் பங்கேற்க உள்ளனர்.
போட்டி ஏற்பாடுகளை கல்லூரி உதவிப் பேராசிரியர் பிருந்தா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

0







