தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றார் த.வெ.க. தலைவர் விஜய்; 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் கோப்பில் முதல் கையெழுத்து





தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார் விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கும் விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்திற்கு வருகை தந்த கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை பொன்னாடை போர்த்தி விஜய் வரவேற்றார்…

விழாவில், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கூட்டணி தலைவர்கள், .. அமைச்சர்கள், விஜய்யின் பெற்றோர், நடிகை திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ”வந்தே மாதரம்” பாடலுடன் விஜய் பதவியேற்பு விழா தொடங்கியது….
அப்போது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் மற்றும் த.வெ.க. தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர்…. வெள்ளை சட்டை, கருப்பு கோட் சூட்… அணிந்து 2 கலந்து கொண்ட விஜய்க்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
விஜய்யுடன் த.வெ.க.வை சேர்ந்த ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ்,வெங்கட்ரமணன், செங்கோட்டையன், நிர்மல்குமார்,ராஜ்மோகன், டாக்டர் பிரபு ,கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்,
பதவி ஏற்பு விழா மூடிந்ததும் கவர்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.அவரை வழியனுப்பி வைத்த முதலமைச்சர் விஜய், , மக்கள் முன்னிலையில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதலில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் இலவசம் என்ற முதல் கோப்பில் கையெழுத்திட்டார் . பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும், மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு கோப்பிலும் முதல்-அமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்…







