அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் மாநில செயற்குழு கூட்டம்; 50க்கும் மேற்பட்ட வானவியல் ஆர்வலர்கள் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி,கல்லூரி மாணவர்கள், மற்றும் பொது மக்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை எளிய முறையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புகள் மூலம் பரப்புரை செய்து வருகிறது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் (TASS)மாநில செயற்குழு கூட்டம் 2 நாட்கள் மதுரையில் நடந்தது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட வானவியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி, நிறமாலை திருவிழா, அக்டோபர் மாதத்தில் மாநில அளவிலான இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டை நடத்துவது, தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் அறிவியல் செயல்பாடுகளை தமிழக முதல்வர் மற்றும் தமிழக மக்களுக்கு எடுத்துச் செல்லவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்,மதுரை அஸ்ட்ரோ கிளப் தலைவர் கிருஷ்ணகுமார், அறிவியல் பலகை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.டாஸ் செயலாளர் சிந்தியா அனைவரையும் வரவேற்றார். டாஸ் மாநில பொதுச்செயலாளர் மனோகர் கலந்து கொண்டு தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொஸைட்டி செயல்பாடுகள் குறித்து பேசினார்.

டாஸ் மூலம் செயல்படுத்தப்படும் ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி குறித்து சொக்கநாதன், மோகனா, நிறமாலை திருவிழா குறித்து சிந்தியா,சாந்தி தனபால், இளைஞர் வானவியல் மற்றும் வின்வெளி அறிவியல் மாநில மாநாடு குறித்து செல்லக்குமார், பேராசிரியர் கண்ணா, மாநில மாதிரி பள்ளிகளில் வானவியல் வகுப்பு குறித்து முத்துசாமி, புதிய வானவில் இதழ் குறித்து சாந்தி, ஜெகதீஸ்வரன், மோசஸ், ஜெயபால்,சமூக வலைதலங்களில் அஸ்ட்ரானமி குறித்து ஆண்டிராஜ் ஆகியோர் பேசினர்.
கள்ளக்குறிச்சி வானவியல் தன்னார்வலர் லதாவிற்கு அஸ்ட்ரானமி கிட் வழங்கப்பட்டது. மதுரை மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.







