139 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மேற்பார்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மந்திதோப்பு – பாண்டவர்மங்கலம் ரோடு ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கைகையில் ஈடுபட்டிருந்னர்.

அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அவர் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த திருப்பதி (வயது 50) என்பதும் அவர் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் , திருப்பதி என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 139 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டவை, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று குறித்து விசசரனை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







