கோவில்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனை; 3 பேர் கைது
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மேற்பார்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர். நவநீதகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் . சண்முகம் மற்றும் போலீசார் கோவில்பட்டி ஸ்ரீராம்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இருளப்பசாமி (52), மணிகண்டன் (50) மற்றும் மனோஜ் (23) ஆகியோர் என்பதும், அவர்கள் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
உடனே போலீசார் , அந்த 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 994 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
கைப்பற்றப்பட்ட மது பாட்டில்கள் எங்கிருந்து கடத்தி வரப்படட்டது? வெளி மாநில சரக்கா அல்லது லோக்கல் டாஸ்மாக்கில் இருந்து சட்டவிரோதமாக வெளிமார்க்கெட்டில் விற்கப்படுகிறதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








