கோவில்பட்டி மாலையம்மன் கோவிலில் கால்நாட்டு விழா சிறப்பு பூஜை
கோவில்பட்டி மாலையம்மன் கோவில் வைகாசி பொங்கல் பெருந்திருவிழா முன்னிட்டு கால்நாட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 8 மணிக்கு செல்வ விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது.

பூஜைகளை சுப்பிரமணிய சாமி முருகன் சாமி செய்தனர். தொடர்ந்து கால்நாட்டு ஊர்வலமாக எடுத்து சென்று மாலையம்மன் கோவிலில் நடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.







