தமிழக முதல்-அமைச்சர் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக, மரியாதை நிமித்தமாக எதிர்க்கட்சி தலைவர்களை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். முதல்-அமைச்சர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தார். அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டிற்கு சென்ற விஜய்யை, வாசலுக்கே வந்து துரை வைகோ வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். […]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் 83 ஆயிரத்து 364 வாக்குகளையும், த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 365 வாக்குகளையும் பெற்றிருந்தனர். த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் அவசர வழக்கு தொடர்ந்தார். அதில், “சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்ட தொகுதிக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அந்த […]
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சீனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் தொடங்கி இரண்டு நாட்களாக லீக் போட்டிகள் நடைபெற்று வந்தன இன்று செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டிகளின் இறுதியில் முடிவுகள் வெளியாகி உள்ளன, விருதுநகர் மாவட்ட அணி 4-1 என்ற கோல் கணக்கில் திருப்பூர் மாவட்ட அணியை வெற்றி பெற்றது சிவகங்கை மாவட்ட அணி 3-0 என்ற கோல் கணக்கில் திருவாரூர் […]
செந்தில் பாலாஜிக்கு எதிரான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு; சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
தமிழ்நாட்டில் 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் சுமார் ரூ.397 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறை கேட்டில் அப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி, டான் ஜெட்கோ தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி, டான்ஜெட்கோ கொள்முதல் பிரிவு நிதி கட்டுப்பாட்டாளர் வி.காசி உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் பொதுநல வழக்கு தாக்கல் செய்தது. மேலும் இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறை மூலம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி எஸ்.பி. மதன், டி.எஸ்.பி. சுனில் ஆகியோர் மேற்பார்வையில் நகர போக்குவரத்து காவல் துறையினர் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் ஆம்னி பஸ் நிலையத்தில் நேற்று மாலை இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளியூர் செல்லும் பஸ் களை நிறுத்தி டிரைவர்களை மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்தனர். அதில் சென்னை செல்லும் 3 ஆம்னி […]
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில்10 தொகுதிகளில் போட்டியிட்டது, இதில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி கிட்டியது. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதா வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் இன்று சட்டசபைக்கு வருகை தந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது முதல்-அமைச்சர் விஜய்க்கும், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து , சட்டசபை வளாகத்தில் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளேன். என்னை வெற்றிபெற […]
தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மாவட்ட வாரியாக உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தூத்துக்குடி டவுன் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்குப் பொருட்களை விநியோகம் செய்ய ஜார்ஜ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு குடோன் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு, வெளி மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள் […]
தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்துக்கு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கைக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்ததால் த.வெ.க. தலைவர் விஜய்யை, முதல்-அமைச்சராக நியமித்து கவர்னர் அர்லேகர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் […]
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள அரவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகன் வேல்பாண்டி (வயது 32). இவர் தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி போலீஸ் நிலையங்களில் வேலை பார்த்தவர். தப்போது முறப்பநாடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். நேற்று வேல்பாண்டி தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து மீண்டும் பணிக்குத் திரும்புவதற்காகத் தனது மோட்டார் சைக்கிளில் முறப்பநாடு நோக்கி வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் […]
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக வ.உ .சி துறைமுக ஆணைய கோப்பைக்கான சீனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானதில் நேற்று காலை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார்.நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா முன்னிலையில் முன்னாள் இந்திய ஆ க்கி வீரர் ஒலிம்பியன் திருமால்வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூத்துக்குடி மற்றும் திண்டுக்கல் மாவட்ட அணிகளுக்கு […]







