கோவில்பட்டியில் மாநில ஆக்கி: 2 நாட்கள் போட்டி வெற்றி நிலவரம்
புதுக்கோட்டை-, திருவண்ணாமலை மாவட்ட அணிகள் மோதிக்கொண்ட காட்சி.

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக வ.உ .சி துறைமுக ஆணைய கோப்பைக்கான சீனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானதில் நேற்று காலை தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார்.நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா முன்னிலையில் முன்னாள் இந்திய ஆ க்கி வீரர் ஒலிம்பியன் திருமால்வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூத்துக்குடி மற்றும் திண்டுக்கல் மாவட்ட அணிகளுக்கு இடையேயான போட்டியை துவக்கி வைத்தார்.

போட்டிகள் தொடக்க நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர்சாமி ராஜன், ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, நாடார் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கூத்தராஜன் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் சிறப்பு விருந்தினர்களுக்கு வீரர்களை ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி மற்றும் மாநிலத் தேர்வு குழு தலைவர் குரு சித்திர சண்முக பாரதி அறிமுகம் செய்து வைத்தார்.
32 மாவட்ட அணிகள்
இப்போட்டியில் மொத்தம் 32 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு குழுவினர் டாபெட் ஜோன்ஸ் , ராஜா ,முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின் தேர்வு செய்ய இருக்கிறார்கள் .தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் தமிழக அணிக்காக புவனேஸ்வரில் நடைபெறும் சீனியர் தேசிய ஆக்கி போட்டியில் விளையாட உள்ளார்கள். போட்டிகளின் இயக்குனராக அணில் நடுவர்களின் மேலாளராக சரவணகுமார் செயல்படுகின்றனர்
முதல் நாள் நடந்த தொடக்க போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி அபாரமாக ஆடி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தர்மபுரி மாவட்ட அணி 6-0 என்ற கோல் கணக்கில் காஞ்சிபுரம் மாவட்ட அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.. மூன்றாவது போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்ட அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஈரோடு மாவட்ட அணியை வீழ்த்தியது
மற்றொரு மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் திருவள்ளூர் மாவட்ட அணி 5-1 என்ற கோல் கணக்கில் சிவகங்கை மாவட்ட அணியை வீழ்த்தியது. திருநெல்வேலி மாவட்ட அணி 3-1 என்று கோல் கணக்கில் திருச்சி மாவட்ட அணியை வீழ்த்தியது.
நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் நீலகிரி 6-0 என்ற கோல் கணக்கில் திருவண்ணாமலை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. செங்கல்பட்டு- விழுப்புரம் மாவட்ட அணிகள் இடையில் நடைபெற்ற போட்டியில் 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் முடிவு பெற்றது. சேலம் 3- 0 என்ற கோல் கணக்கில் கரூர் மாவட்ட அணியை தோற்கடித்தது. தஞ்சாவூர் மாவட்ட அணி 11-0 என்ற கோல் கணக்கில் தென்காசி மாவட்ட அணியை வெற்றி பெற்றது .ராமநாதபுரம் மாவட்ட அணி 2-0 என்ற கோல் கணக்கில் தேனி மாவட்ட அணியை வெற்றி பெற்றது கோயமுத்தூர் மாவட்ட அணி 3-1 என்ற கோல் கணக்கில் நாமக்கல் மாவட்ட அணியை வெற்றி பெற்றது .வேலூர் மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் ராணிப்பேட்டை மாவட்ட அணியை வெற்றி பெற்றது.அரியலூர் 5-0 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை மாவட்ட அணியை வெற்றி பெற்றது சென்னை மாவட்ட அணி 10-0 என்ற கோல் கணக்கில் காஞ்சிபுரம் மாவட்ட அணியை வெற்றி பெற்றது
இன்றைய போட்டிகள்
சீனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி இரண்டாம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக நாடார் மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் இருந்து செயற்கை புல் ஆக்கி மைதானத்திற்கு மாற்றப்பட்டு போட்டிகள் நடந்து வருகின்றன
முதல் போட்டியில் திருச்சி மாவட்ட அணி 6-0 என்ற கோல் கணக்கில் கரூர் மாவட்ட அணியை வீழ்த்தியது மதுரை மாவட்ட அணி 3-0 என்ற கோல் கணக்கில் திருவாரூர் மாவட்ட அணியை வெற்றி பெற்றது திருப்பூர் மாவட்ட அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஈரோடு அணியை வெற்றி பெற்றது

சென்னை மாவட்ட அணி 5-0 என்ற கோல் கணக்கில் கன்னியாகுமரி மாவட்ட அணியை வெற்றி பெற்றது திருநெல்வேலி மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் சேலம் மாவட்ட அணியை வெற்றி பெற்றது தூத்துக்குடி மாவட்ட அணி 5-0 என்ற கோல் கணக்கில் விழுப்புரம் மாவட்ட அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது தேனி மாவட்ட அணி 5 – 0 ஈன்ற கோல் கணக்கில் தென்காசி மாவட்ட அணியை வெற்றி பெற்றது செங்கல்பட்டு மாவட்ட அணி 4-1 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் மாவட்ட அணியை வெற்றி பெற்றது
ராமநாதபுரம் மாவட்ட அணி தஞ்சாவூர் மாவட்ட அணி இடையில் நடைபெற்ற போட்டி 2-2 கோல் கணக்கில் சமநிலையில் முடிவு பெற்றது திருவண்ணாமலை மாவட்ட அணி 1-0 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை மாவட்ட அணியை வெற்றி பெற்றது நாமக்கல் மாவட்ட அணி 2-1 என்ற கோல் கணக்கில் ராணிப்பேட்டை மாவட்ட அணியை வெற்றி பெற்றது அரியலூர் மாவட்ட அணி 6-4 என்ற கோல் கணக்கில் நீலகிரி மாவட்ட அணியை வெற்றி பெற்றது கோயம்புத்தூர் மாவட்ட அணி 2-0 என்ற கோல் கணக்கில் வேலூர் மாவட்ட அணியை வெற்றி பெற்றது







