குடிபோதையில் ஆம்னி பஸ்களை இயக்கிய 3 டிரைவர்களின்உரிமம் ரத்து
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறை மூலம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி எஸ்.பி. மதன், டி.எஸ்.பி. சுனில் ஆகியோர் மேற்பார்வையில் நகர போக்குவரத்து காவல் துறையினர் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் ஆம்னி பஸ் நிலையத்தில் நேற்று மாலை இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வெளியூர் செல்லும் பஸ் களை நிறுத்தி டிரைவர்களை மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்தனர். அதில் சென்னை செல்லும் 3 ஆம்னி பஸ்களை ஓட்டி வந்த டிரைவர்கள் மது போதையில் இருந்த து கண்டறியப்பட்டு அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தலா ரூ.15000 அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்செந்தூர் உடன்குடி பகுதியில் இருந்து பயணிகளுடன் ஓட்டி வரப்பட்ட 3 ஆம்னி பஸ்களையும் மாற்று டிரைவர்கள் மூலம் இயக்க அனுமதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., மேற்படி ௩ டிரைவர்களின் வாகன ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.







