கோவில்பட்டியில் மாநில ஆக்கி: தூத்துக்குடி உள்பட 8 மாவட்ட அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சீனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் தொடங்கி இரண்டு நாட்களாக லீக் போட்டிகள் நடைபெற்று வந்தன இன்று செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டிகளின் இறுதியில் முடிவுகள் வெளியாகி உள்ளன,
விருதுநகர் மாவட்ட அணி 4-1 என்ற கோல் கணக்கில் திருப்பூர் மாவட்ட அணியை வெற்றி பெற்றது
சிவகங்கை மாவட்ட அணி 3-0 என்ற கோல் கணக்கில் திருவாரூர் மாவட்ட அணியை வெற்றி பெற்றது

நீலகிரி மாவட்ட அணி 7-0 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை மாவட்ட அணியை வெற்றி பெற்றது
தஞ்சாவூர் மாவட்ட அணி 8-0 என்ற கோல் கணக்கில் தேனி மாவட்ட அணியை வெற்றி பெற்றது
கோயம்புத்தூர் மாவட்ட அணி 2-0 என்று கோல் கணக்கில் ராணிப்பேட்டை மாவட்ட அணியை வெற்றி பெற்றது
திருவாரூர் மாவட்ட அணி 1-0 என்ற கோல் கணக்கில் திருவள்ளூர் மாவட்ட அணியை வெற்றி பெற்றது
ராமநாதபுரம் மாவட்ட அணி 14-0 என்ற கோல் கணக்கில் தென்காசி மாவட்ட அணியை வெற்றி பெற்றது
அரியலூர் மாவட்ட அணி 4-0 என்ற கோள் கணக்கில் திருவண்ணாமலை மாவட்ட அணியை வெற்றி பெற்றது
மற்றொரு மைதானமான நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்
மதுரை மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் திருவள்ளூர் மாவட்ட அணியை வெற்றி பெற்றது
சென்னை மாவட்ட அணி 2-1 என்ற கோல் கணக்கில் தர்மபுரி மாவட்ட அணியை வெற்றி பெற்றது
திருநெல்வேலி மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் கரூர் மாவட்ட அணியை வெற்றி பெற்றது கன்னியாகுமரி மாவட்ட அணி 6 1 என்ற கோல் கணக்கில் காஞ்சிபுரம் மாவட்ட அணியை வெற்றி பெற்றது
திருச்சி மாவட்ட அணி 2-1 என்ற கோல் கணக்கில் சேலம் மாவட்ட அணியை வெற்றி பெற்றது
விழுப்புரம் மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் மாவட்ட அணியை வெற்றி பெற்றது
நாமக்கல் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வேலூர் மாவட்ட அணியை வெற்றி பெற்றது
தூத்துக்குடி மாவட்ட அணி 3-1 என்ற கோல் கணக்கில் செங்கல்பட்டு மாவட்ட அணியை வெற்றி பெற்றது
திருப்பூர் மாவட்ட அணியும் கிருஷ்ணகிரி மாவட்ட அணியும் விளையாடிய போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவு பெற்றது
கடைசியாக நடைபெற்ற லீக் போட்டியில் தர்மபுரி மாவட்ட அணி 1-0 என்ற கோல் கணக்கில் கன்னியாகுமரி மாவட்ட அணியை வெற்றி பெற்றது

காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள்
நாளை நடைபெறும் காலிறுதி போட்டிக்கு 9 புள்ளிகள் பெற்று சென்னை, விருதுநகர் , மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, அரியலூர் , கோயம்புத்தூர், மாவட்ட அணிகள் தகுதி பெற்றன 7 புள்ளிகள் பெற்ற தஞ்சாவூர் மாவட்ட அணியும் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன
நாளை காலை நடைபெறும் முதல் கால் இறுதி போட்டி காலை 6 மணி அளவில் சென்னை மாவட்ட அணியும் கோயமுத்தூர் மாவட்ட அணியும் விளையாடுகின்றன
7.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட அணி திருநெல்வேலி மாவட்ட அணியை எதிர்கொள்கிறது
9 மணி அளவில் விருதுநகர் மாவட்ட அணி தஞ்சாவூர் மாவட்ட அணையை எதிர்கொள்கிறது
காலை 10:30 மணியளவில் கடைசி கால் இறுதி போட்டி மதுரை மாவட்ட அணி அரியலூர் மாவட்ட அணியை எதிர்கொள்கிறது







