கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, இன்று 10.4.2026 காலை 8 மணிக்கு அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது, இதையொட்டி காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது, 7 மணிக்கு- நந்தவனத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர், காலை 8 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது, 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது,, இந்த பூஜையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்,
தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். சுனில் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சோனியா மற்றும் போலீசார் சிதம்பரநகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த வன்னியராஜன் (வயது 52) என்பதும் அவர் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக வன்னியராஜனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ;.2லட்சம் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 11 முதல் 14 வரை மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஜூனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன் போட்டி நடைபெறுகிறது இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பெண்கள் அணி கலந்து கொண்டு விளையாட இருக்கிறது போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பெண்கள் அணியினருக்கு கடந்த 10 நாட்களாக கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காலையும் மாலையும் பயிற்சி நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பெண்கள் அணி பயிற்சி முகாமின் இறுதியில் […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக நடத்தப்படும் மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் போட்டி கோயமுத்தூரிலும் சீனியர் ஆண்கள் போட்டி கோவில்பட்டியிலும் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட இருப்பதால் இன்று மாலை கோவில்பட்டி எஸ் டி ஏ டி ஆக்கி மைதானத்தில் வீரர்கள் தேர்வு நடைபெற்றது. ஜூனியர் ஆண்கள் அணி தேர்வில் 40 வீரர்கள் கலந்து கொண்டனர்.சீனியர் ஆண்கள் அணி தேர்வில் 54 வீரர்கள் கலந்து கொண்டனர். […]
கோவில்பட்டி நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நர்சரி மற்றும் பிரைமரி வகுப்பு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. உறவின்முறை சங்க உப தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயபாலன், பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலர் வக்கீல் செல்வம், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி முதல்வர் பிரபு வரவேற்றார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு பாராட்டு நிகழ்வில் உறவின்முறை […]
நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ப.ராணியை ஆதரித்து, நாமக்கல் பூங்கா சாலை பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற கனிமொழி எம்.பி,. தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி பேசியதாவது:- முதல் முறையாக போட்டியிடும் பெண் வேட்பாளரான நம்முடைய நாமக்கல் ராணிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஐந்து ஆண்டு ஆட்சி மக்களுக்கான […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்த தேர்தல் அறிக்கையை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் வெளியிட்டார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு: *ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். *டியூஷன் அக்கா திட்டம் செயல்படுத்தப்படும் *முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 232 வழக்குகள்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுவர் விளம்பரங்களை அழிக்காதது மற்றும் அனுமதி இன்றி பதாகைகள் வைத்தது தொடர்பாக 184 வழக்குகளும், சமூக வலைதள விதிமீறல் தொடர்பாக 4 வழக்குகளும், உரிய ஆவணமின்றி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு சென்றதாக 44 வழக்குகளும் என மொத்தம் 232 வழக்குகள் பதிவாகியுள்ளன. தி.மு.க.- 54, அ.தி.மு.க.- 39, த.வெ.க.- 36, வி.சி.க.- 19, பா.ஜ.க.- 12, அ.ம.மு.க.-10, […]
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் பிரசார வேனில் ஏறி நெல்லை நோக்கி புறப்பட்டார். அவரது வேனை மோட்டார் சைக்கிள்களில் தொண்டர்கள் பின் தொடர்ந்து செல்வதை தவிர்ப்பதற்காக போலீசார் ஆங்காங்கே தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். வாகைகுளம் பகுதியில் இருந்து த.வெ.க. தொண்டர்கள் மோட்டார் சைக்கிள்களில் விஜய் சென்ற வேனை […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடவாமல் தடுக்கும் பொருட்டும், கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டும் காவல்துறையினர் தீவிர வாகனதணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மேற்பார்வையில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. முனியசாமி மற்றும் போலீசார் வடக்கு ஆத்தூர் […]







