தூத்துக்குடி மாவட்ட ஜூனியர், சீனியர் ஆண்கள் ஆக்கி அணி வீரர்கள் தேர்வு; கோவில்பட்டியில் நடந்தது
Oplus_16908288
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக நடத்தப்படும் மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் போட்டி கோயமுத்தூரிலும் சீனியர் ஆண்கள் போட்டி கோவில்பட்டியிலும் அடுத்த மாதம் நடக்க உள்ளது.
இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட இருப்பதால் இன்று மாலை கோவில்பட்டி எஸ் டி ஏ டி ஆக்கி மைதானத்தில் வீரர்கள் தேர்வு நடைபெற்றது.

ஜூனியர் ஆண்கள் அணி தேர்வில் 40 வீரர்கள் கலந்து கொண்டனர்.சீனியர் ஆண்கள் அணி தேர்வில் 54 வீரர்கள் கலந்து கொண்டனர்.
தேர்வு குழு உறுப்பினர்களாக கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி பயிற்சியாளர் முத்துக்குமார் காளிமுத்து பாண்டி ராஜா, முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின், உடற் கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார்,மாயாண்டி ஆகியோர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருந்து வீரர்களை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட ஜூனியர் வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் நடைபெறும்.சீனியர் வீரர்களுக்கான பயிற்சி முகாம் மே 4 தேதி முதல் நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம், செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோர் செய்திருந்தனர்








