திருவள்ளூரில் மாநில ஜூனியர் பெண்கள் ஆக்கி போட்டி: தூத்துக்குடி மாவட்ட அணி வீராங்கனைகள், கோவில்பட்டியில் இருந்து சென்றனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 11 முதல் 14 வரை மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஜூனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன் போட்டி நடைபெறுகிறது
இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பெண்கள் அணி கலந்து கொண்டு விளையாட இருக்கிறது போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பெண்கள் அணியினருக்கு கடந்த 10 நாட்களாக கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காலையும் மாலையும் பயிற்சி நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பெண்கள் அணி பயிற்சி முகாமின் இறுதியில் 18 பேர் கொண்ட தூத்துக்குடி மாவட்ட அணி அறிவிக்கப்பட்டது இதில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் பெயர் விவரம் வருமாறு
புஷ்பா தேவி அணி தலைவர் கோல்கீப்பர் அஸ்வதி ,முகிலா, மல்லிகா, சௌந்தர்யா, கிருத்திகா, மனிஷா, வைஷ்ணவி, சக்தி பிரியா , செல்வராணி , அர்ச்சனா, சரண்யா, மதுமிதா, தன ஸ்ரீ, சண்முகப்பிரியா, அஸ்வர்தா, முகுந்தா தேவி, ஸ்னோஸியா, அணி மேலாளர் பேபி அணி பயிற்சியாளர் மாயாண்டி முன்னாள் இந்திய கூடைப்பந்து வீரர் ரவீந்திரா ,
மனநல நிபுணர் பாலாஜி, ஆடிட்டர் தயாள் சங்கர் , முன்னாள் ராணுவ வீரர் காளிதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கி மாநிலப் போட்டிக்கு வழியனுப்பி வைத்தனர்

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி மற்றும் பொறுப்பாளர்கள் காளிமுத்து பாண்டிராஜா, வேல்முருகன், புகழேந்தி, கிருஷ்ணமூர்த்தி, சுரேந்திரன், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்







