ரூ.2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் ஒருவர் சிக்கினார்
AI தொழில்நுட்ப புகைப்படம்
தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். சுனில் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சோனியா மற்றும் போலீசார் சிதம்பரநகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த வன்னியராஜன் (வயது 52) என்பதும் அவர் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக வன்னியராஜனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ;.2லட்சம் மதிப்புள்ள 45 கிலோ 500 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







