தூத்துக்குடியில் ரோந்து போலீசிடம் சிக்கிய கஞ்சா கடத்தல் கும்பல்
AI தொழில்நுட்ப போட்டோ.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடவாமல் தடுக்கும் பொருட்டும், கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டும் காவல்துறையினர் தீவிர வாகனதணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மேற்பார்வையில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. முனியசாமி மற்றும் போலீசார் வடக்கு ஆத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (21) மற்றும் கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சோம்சக்தி (25) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உனடியாக போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சுனில் அவர்கள் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர். மாரிச்செல்வம் மற்றும் போலீசார்) சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்தூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவ சீனு (21), அருள் (19), விஸ்வநாதன் (20) மற்றும் மடத்தூர் பகுதியை சேர்ந்த அபய்குமார் (32) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சா, ரூபாய் 10,000/- பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








