நாமக்கல் தொகுதியில் கனிமொழி எம்.பி தேர்தல் பிரசாரம்
நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ப.ராணியை ஆதரித்து, நாமக்கல் பூங்கா சாலை பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற கனிமொழி எம்.பி,. தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி பேசியதாவது:-

முதல் முறையாக போட்டியிடும் பெண் வேட்பாளரான நம்முடைய நாமக்கல் ராணிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஐந்து ஆண்டு ஆட்சி மக்களுக்கான ஆட்சி; குறிப்பாக பெண்களுக்கான ஆட்சி
நாமக்கல் தொகுதியில் தி.மு.க அரசு செய்த வளர்ச்சிப் பணிகள்: நாமக்கல் மாநகரில் புதிய டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.401 கோடி செலவில் சுற்றுவட்டச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் புதிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. ரூ.313 கோடியில் நாமக்கலில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாமக்கலில் ரூ.90 கோடியில் அதிநவீன ஆவின் பால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள் நாமக்கல்லில் ஐவுளிக் குழுமம் உருவாக்கப்படும். காவேரி ஆற்றில் மேலப்பேட்டைப்பாளையம் பகுதியில் குளிப்பதற்கான படித்துறை அமைத்துத் தரப்படும். திருமணிமுத்தாற்றின் குறுக்கே ஒரு மேம்பாலம் அமைக்கப்படும்.

கோழி வளர்ப்புத் தொழிலில் ஆலோசனைகளை வழங்கிட ஒருங்கிணைந்த கோழி வளர்ப்பு மையம் உருவாக்கப்படும். மோகனூர் பாசன வாய்க்கால் கரையில் உள்ள மண்பாதையை, கான்கிரீட் பாதையாக மாற்றித் தரப்படும். சுய உதவி குழு பெண்களுக்கு முதலீட்டுடன் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் வரை பிணை எதுவுமின்றி மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும்.
இந்தத் தொகுதியில் நம்முடைய நாமக்கல் ராணி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர வேண்டும் இவ்வாறு கனிமொழி பேசினார்,.







