• October 21, 2026

Month: February 2026

செய்திகள்

ஓ.பன்னீர் செல்வம் எங்களுடன்தான் உள்ளார்; அண்ணாமலை

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் கோவிலுக்கு வந்த  பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வழிபாடு நடத்தினார் .பின்னர்  செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- கமல்ஹாசன் சிறந்த நடிகர் அதில் மாற்றுக் கருத்து இல்லை. நன்றாக உழைக்கிறார். மத்திய நிதி மந்திரி, இன்னொருவர் பேசியதை குறிப்பிட்டு அவர் சொல்லவந்ததை கமல்ஹாசன் தவறாக புரிந்து கொண்டார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் அவர் மீது குற்றம் சுமத்த விரும்பவில்லை. அடுத்த முறை பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது […]

கோவில்பட்டி

மாநில அளவிலான வாசகர் விழா  போட்டிகள்; அருப்புக்கோட்டை கல்லூரிக்கு  சுழற்கோப்பை

கோவில்பட்டி,கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் நூலகத்துறை சார்பில்  மாநில அளவிலான வாசகர் விழா  போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. மாநில அளவில் வெவ்வேறு  கல்லூரிகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு புத்தக குறிப்பான் தயாரித்தல், புத்தக மதிப்புரை, சொல் விளையாட்டு, நினைவாற்றல் பயிற்சி, கதை எழுதுதல், மவுனமொழி நடிப்பு, புத்தகத்தின் ஆசிரியரைக் கண்டுபிடித்தல் போன்ற நூலகம் தொடர்பான 7 தலைப்புகளில் போட்டிகள் நூலக வாசகர் உறுப்பினர்களால் நடத்தப்பட்டது. மாலையில்  நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு . […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பெண் கொலை: 8 ஆண்டுகளுக்கு பிறகு 2 பேர் சிக்கினர்

கோவில்பட்டியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு 2 பேர்  சிக்கி உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:- கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியில் கடந்த 30.9.2018 அன்று 48 வயது பெண் கொலை செய்ய்யப்பட்டார், இந்த  சம்பவம் தொடர்பாக  கோவில்பட்டி கிழக்கு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேற்படி வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி எதிரிகளை கண்டுபித்து கைது செய்ய தனிப்படை அமைத்து மாவட்ட காவல் […]

செய்திகள்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து 12ஆம் தேதி திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.கூறி இருப்பதாவது:- மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் – நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் மத்திய பாஜக அரசையும் அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக வையும் கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் கழக ஒன்றியம், […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 99 பிடியாணை குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர். நை. சிலம்பரசன் உத்தரவின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனைத்து உட்கோட்ட போலீசாரும் தீவிர ரோந்து பணி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி: கார்கள் மோதல்: 2 பேர் பலியான பரிதாபம்

 திருநெல்வேலி என் ஜி ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). இவரது மனைவி கவிதா(55). இருவரும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விபத்து ஒன்றில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்துவிட்டு காரில் ஊருக்கு திரும்பினர். காரை |முத்துக்குமார் என்பவர் ஓட்டினார்.  கோவில்பட்டிஅருகே தேசிய நெடுஞ்சாலையில் பெத்தேல் பகுதியில் நள்ளிரவில் சென்றபோது, திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சென்டர் மீடியன் பகுதியை தாண்டி இவர்கள் கார் […]

செய்திகள்

கோவில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி கொலை: 3 பேர் கைது

கோவில்பட்டி அருகே  ஆவல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து ராஜ் மகன் கார்த்திக் (வயது 28), கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நள்ளிரவில், கார்த்திக் வீடு அருகே அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன்கள் வேல் முருகன் (33), அய்யாதுரை (28), முத்துசாமி மகன் முனியசாமி (34) ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது.  இதனை கார்த்திக், கண்டித்துள்ளார்.இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.  ஆத்திரமடைந்த வேல்முருகன் […]

கோவில்பட்டி

பல்வேறு போட்டிகள்:சாத்தூர் கல்லூரிக்கு `சாம்பியன்ஷிப்’ பட்டம்

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் தகவல் தொழில் நுட்பவியல் துறை, சார்பாக மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில்  கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர்.மூ.சுப்புலட்சுமி தலைமையுரை ஆற்றினார். சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர், தாவரவியல் துறை இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் .பா.மகேஷ்குமார் பாராட்டுரை வழங்கினார். பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன. வெவ்வேறு  கல்லூரிகளிலிருந்து 133 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகளின் நிறைவில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் […]

தூத்துக்குடி

போட்டித் தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாத நேரடி பயிற்சி வகுப்புகள்; தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் TNPSC, TNURB, RRB, SSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாத நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ரெயில்வே தேர்வாணையத்தால்  22,195 Group-D பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது. RRB மற்றும் SSC தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற புதன்கிழமை (11.02.2026) காலை 10:30 மணிக்கு தொடங்கப்பட […]

செய்திகள்

திருப்பரங்குன்றம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே  சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே டீக்கடை நடத்தி வந்தார்.  தினமும் அதிகாலையில் இவரே கடை திறப்பது வழக்கம். வழக்கம்போல்  செந்தில்குமார் இன்று காலை கடையை திறக்க சென்றார். அப்போது அங்கு வாகனங்களில் வந்த 4 பேர் வழிமறித்து , தாங்கள் மறைத்து […]