இந்திய ராணுவ விமானப்படைப்பிரிவிற்கு 600 பில்லியன் டாலர்கள் மதிப்பில் 6 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை அமெரிக்காவில் இருந்து வாங்க கடந்த 2020ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தப்படி 2 தவணைகளாக ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதன்படி, முதல் தவணையாக 3 அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் 2024 ஜூலை மாதம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக இந்த ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் தாமதம் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 22ம் தேதி […]
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாமகவின் நிர்வாகக்குழு கூட்டம் விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்,மானம் நிறைவேற்றப்பட்டது,மேலும் சின்னம், தலைவர் தொடர்பான விவகாரங்களில் அன்புமணி செய்த மோசடி வேலைகளையும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- அன்புமணியை கட்சியில் […]
கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில் இலவச மருத்துவமுகாம் நடக்கிறது 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் இந்த முகாம் நடக்கிறது,. டாக்டர்கள் சஞ்சய் சிவநாராயணன், என்.ஆத்மிகா சஞ்சய். முத்து கிஷோர், வினோதினி ஆகியோர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள். முகாமின் போது பொது மருத்துவம், எலும்பு மூட்டு மருத்துவம்,. மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த இலவச மருத்துவமுகாமை கோவில்பட்டி மற்றும் சுற்று […]
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த ஒருவர் முதுகுளத்தூரில் கடந்த மாதம் புதிதாக லைசென்ஸ் பெற்று பூச்சி கொல்லி மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் என்பவர் சில நாட்களாக அந்த கடைக்கு வந்து, நான்தான் உனக்கு லைசன்ஸ் கொடுத்த அதிகாரி, எனக்கு அலுவலக செலவு நிறைய இருக்கிறது. அதனால் எனக்கு ரூ.15 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக்கேட்டுள்ளார். இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் […]
தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் ஓட்டுநர்கள் பணியாளர் நல சங்கம் மாவட்டத் தலைவர் பொன்ராஜ் என்பவரை மாநகராட்சி ஒப்பந்ததாரரான அவர்லேண்ட் நிறுவன மேலாளர் முருகேசன் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில செயற்குழு உறுப்பினர் சகாயம், சி.பி.ஐ.எம்.எல் மாவட்ட பொறுப்பாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சுமார் 40 குப்பை அள்ளும் வாகனங்களுடன் ஒப்பந்ததாரர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த […]
அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளையின் சார்பாக பாரதியார் பிறந்தநாள் விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் திருமலை முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.ஆசிரியர் வேல்முருகன் வரவேற்று பேசினார். ஆசிரியர் முருகசரஸ்வதி அறிமுக உரையாற்றினார். கோவில்பட்டி வட்டார எழுத்தாளர்களுக்கு எழுத்தாளுமை விருது மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பன்முகத் திறன் கொண்டோருக்கு பேராண்மை விருதும் வழங்கி சிறப்பு செய்யப்படது. பாரதியை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு […]
ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்த பரப்புரையில் கலந்துகொள்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தவெக தலைமை வெளியிட்டுள்ளது அதன் விபரம் பின்வருமாறு; ”வரும் 18ஆம் தேதி (18.12.2025, வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் காலை 11 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ‘ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறையின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற உள்ள இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குக் […]
கோவில்பட்டியில் மாரத்தான் போட்டி: ஆண், பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.
அமமுக. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு, கட்சியின் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் ஜாதி, மத, அரசியல் வேறுபாடு இன்றி, “மாற்றத்திற்கான ஓட்டம், முன்னேற்றத்திற்கான ஓட்டம்” என்ற தலைப்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். 17 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 12 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு 5 கிலோ […]
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ராம்லட்சுமி நகர் தென் பகுதியில் சாலை, சீவலப்பேரி குடிநீர், தெரு விளக்கு வசதிகள் கேட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக் கை விடுத்து வருகின்றனர். இதுவரை அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் செய்து தரப்படவில்லை. கடந்த வாரம் வரை தொடர்ந்து பெய்த மழையில் இப்பகுதியில் உள்ள சாலை சேறும் சகதியுமாக மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. இந்நிலையில், ராம்லட்சுமி நகர் தென் பகுதி மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி […]
திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வழக்கம் போல் நேற்று பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது,சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் அய்யப்ப பக்தர்களும் அதிகளவில் வந்திருந்ததால் திருச்செந்தூரில் கூட்டம் அலைமோதியது. நேற்று கார்த்திகை மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த மணமக்கள், தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் திருச்செந்தூருக்கு வந்திருந்தனர். கோவில் சண்முக விலாச மண்டபம் மற்றும் கோவில் வளாகங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட […]







