கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில் இலவச மருத்துவமுகாம்; 21-ந்தேதி நடக்கிறது
கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில் இலவச மருத்துவமுகாம் நடக்கிறது 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் இந்த முகாம் நடக்கிறது,.
டாக்டர்கள் சஞ்சய் சிவநாராயணன், என்.ஆத்மிகா சஞ்சய். முத்து கிஷோர், வினோதினி ஆகியோர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள்.

முகாமின் போது பொது மருத்துவம், எலும்பு மூட்டு மருத்துவம்,. மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த இலவச மருத்துவமுகாமை கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவர் ரகுபதி, செயலாளர் செலலட்சுமி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.







