பாரதியார் பிறந்தநாள் விழா
அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளையின் சார்பாக பாரதியார் பிறந்தநாள் விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.
அறக்கட்டளை தலைவர் திருமலை முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.ஆசிரியர் வேல்முருகன் வரவேற்று பேசினார்.

ஆசிரியர் முருகசரஸ்வதி அறிமுக உரையாற்றினார். கோவில்பட்டி வட்டார எழுத்தாளர்களுக்கு எழுத்தாளுமை விருது மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பன்முகத் திறன் கொண்டோருக்கு பேராண்மை விருதும் வழங்கி சிறப்பு செய்யப்படது.
பாரதியை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பரிசினை பெற்றனர். ஆசிரியர்கள் நிர்மலா, ஜெயபாரதி விழாவை தொகுத்து வழங்கினர்
விழாவில் கருத்தரங்கம் நடைபெற்றது எழுத்தாளர் பாஸ்கரன் மற்றும் ஆசிரியர்கள் கவியரங்க கருத்தாளர்கள் கலந்து கொண்டனர்.







