கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பயணியர் விடுதி முன்பு தொடங்கியது.கல்லூரி முதல்வர் முனைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி கொடி அசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் உதயகுமார், நகர துப்புரவு ஆய்வாளர்கள் ஆரியங்காவு, சாந்திமீனா, சந்திரா மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கோவில்பட்டி […]
தூத்துக்குடி மாவட்ட அளவிவில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு கணித வினாடி வினாப் போட்டி கொவில்பட்ட்டி ஜி.வி.என்.கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியர்களால் நடத்தப்பட்டது. இப்போட்டியை கல்லூரி முதல்வர் மூ.சுப்புலட்சுமி தலைமை உரையாற்றி தொடங்கி வைத்தார், அதனைத் தொடர்ந்து கணிதத்துறை இணைப்பேராசிரியர் அ. பாண்டியராணி வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். உதவிப்பேராசிரியர் பா.இசக்கிஅம்மாள் என்ற சண்முகம் வரவேற்று பேசினார். ஆதித்தனார் கல்லூரி, கணிதத்துறை ஓய்வு பெற்ற தலைமை மற்றும் இணைப்பேராசிரியர் சி. சேகர், கல்லூரி, சிறப்புரை ஆற்றினார். […]
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கரூர் துயரச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அரசின் நடவடிக்கைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கிறேன்.கரூர் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது கரூர் பரப்புரைக்கு தவெக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட […]
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ காலி பணியிடங்களுக்கான முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்பில்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 645 காலிப் பணியிடங்களுக்கு TNPSC Group-II & II-A முதல்நிலை தேர்வானது 28.09.2025 &
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பில் இன்று சமூக அறக்கட்டளையை சேர்ந்த 300க்கும்மேற்பட்ட ஏழை எளிய மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் 16வகையான மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சௌபாக்யா மகாலில் நடைபெற்றது. ரோட்டரி தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்,.மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன்,முன்னாள் உதவி ஆளுநர் முத்துசெல்வம் ,சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட புரவலர் விநாயகா ஜி.ரமேஷ் ,நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.செயலாளர் பழனி குமார் அனைவரையும் வரவேற்றார்.ரோட்டரி […]
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்.16 முதல் 18-ம் தேதிக்குள் தொடங்குவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. மேலும், கடற்கரை பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று அதிகாலை முதல் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மேலும் காலை நேரத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. திடீர் மழையால் […]
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; தூத்துக்குடி ஆட்சியர் அழைப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் என மொத்தம் எட்டாயிரம் ரூபாய் வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை வாழுங்காலமெல்லாம் தமிழ்த் […]
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) அக்டோபர் 15, 1931ல் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் ஒரு படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷியம்மா ஆகியோருக்கு 5வது மகனாகப் பிறந்தார். இவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் என்பதால், இளம் வயதிலேயே, இவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். இவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி […]
திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் கூறி இருப்பதாவது:- * மதுரை ரெயில்வே கோட்டத்தில் பல இடங்களில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் செங்கோட்டை –மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16, 17, 18 மற்றும் 22-ந் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். * நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 23 மற்றும் 26-ந் தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக […]
சென்னை திரு வி க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக பாககிளை கழக நிர்வாகிகள் வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு வருகிற தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஜெயக்குமார் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:- நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை விட பெரிய சக்தி இது ஒன்றுமே கிடையாது. […]







