ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகை தொகுப்பு
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பில் இன்று சமூக அறக்கட்டளையை சேர்ந்த 300க்கும்மேற்பட்ட ஏழை எளிய மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் 16வகையான
மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சௌபாக்யா மகாலில் நடைபெற்றது. ரோட்டரி தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்,.மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன்,முன்னாள் உதவி ஆளுநர் முத்துசெல்வம் ,சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட புரவலர் விநாயகா ஜி.ரமேஷ் ,நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.செயலாளர் பழனி குமார் அனைவரையும் வரவேற்றார்.ரோட்டரி உறுப்பினர்கள் ரியல் எஸ்டேட் கண்ணன், பூல்பாண்டி இளங்கோ,நடராஜன், எல்.ஐ.சி.கருப்பசாமி, வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் நாராயணசாமி நன்றி தெரிவித்தார்.







