டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ காலி பணியிடங்களுக்கான முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 645 காலிப் பணியிடங்களுக்கு TNPSC Group-II & II-A முதல்நிலை தேர்வானது 28.09.2025 அன்று நடைபெற்றது.
இந்த தேர்வின் முதன்மைத் தேர்வுக்கு ( MAINS) தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் கட்டணமில்லா முதன்மைத் தேர்வுக்கான (MAINS) பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் கீழ்க்கண்ட லிங்க் ஐ கிளிக் செய்து ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறாா்கள்.
மேற்கண்டவாறு அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது,







