பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பயணியர் விடுதி முன்பு தொடங்கியது.கல்லூரி முதல்வர் முனைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி கொடி அசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் உதயகுமார், நகர துப்புரவு ஆய்வாளர்கள் ஆரியங்காவு, சாந்திமீனா, சந்திரா மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தை சுற்றிலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்கள் ஆகியவற்றை அகற்றினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி உதவி பேராசிரியர்கள் மகாராஜன், பெரியசாமி, பிரசாந்த், சித்ரா மற்றும் உடற்கல்வி இயக்குனர் உமாசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.







