11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கணித வினாடி வினா போட்டி
தூத்துக்குடி மாவட்ட அளவிவில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு கணித வினாடி வினாப் போட்டி கொவில்பட்ட்டி ஜி.வி.என்.கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியர்களால் நடத்தப்பட்டது.
இப்போட்டியை கல்லூரி முதல்வர் மூ.சுப்புலட்சுமி தலைமை உரையாற்றி தொடங்கி வைத்தார், அதனைத் தொடர்ந்து கணிதத்துறை இணைப்பேராசிரியர் அ. பாண்டியராணி வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். உதவிப்பேராசிரியர் பா.இசக்கிஅம்மாள் என்ற சண்முகம் வரவேற்று பேசினார்.

ஆதித்தனார் கல்லூரி, கணிதத்துறை ஓய்வு பெற்ற தலைமை மற்றும் இணைப்பேராசிரியர் சி. சேகர், கல்லூரி, சிறப்புரை ஆற்றினார். மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து, வினாடி வினா போட்டியை நடத்திக் கொடுத்தார். தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
போட்டியின் போது கணித திறன் சார்ந்த கேள்விகள் மற்றும் உயர்கல்வி படிப்பை தேர்ந்தெடுக்கும் போது ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள பயிற்சி வழங்கினார். வினாடி வினா போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 13 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இப்போட்டியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் முதல் பரிசாக ரூ. 2000 மற்றும் இரண்டாம் பரிசாக ரூ. 1000 காசோலை வழங்கப்பட்டது.







