முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட வாரியாக பள்ளி மாணவர்கள் அணிகள் பங்கேற்கும் மாநில போட்டி கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. செயற்கை புல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. முதல் போட்டியாக ராமநாதபுரம் மாவட்ட அணி 5-0 என்ற கோல் கணக்கில் திருவண்ணாமலை மாவட்ட அணியை வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அணி 4-1 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை மாவட்ட அணியை வீழ்த்தியது. மூன்றாவது ஆட்டத்தில் அரியலூர் மாவட்ட […]
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ’வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்னிலையில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. […]
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு மாதமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று 49 வது அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி இலுப்பையூரணி அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதி கோவிலில் வைத்து பொங்கல் பிரசாதம் அன்னதானம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை தலைவரும் கழுகுமலை காமினி மோட்டார்ஸ் பைனான்ஸ் அதிபருமான ஜெயக்கொடி வரவேற்றார்.. மிலிட்டரி சந்திரசேகர், அரசு ஒப்பந்ததாரர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவணநாத சுவாமி கோவிலில் இன்று மாலை புரட்டாசி சனி பிரதோஷ பூஜை நடைபெற்றது. ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டனர், நந்தியம்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது, இதேபோல் சிவனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இறுதியில் பகதர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கோவில்பட்டி மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று மாலை பிரதோஷ பூஜை நடைபெற்றது. எராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அபிஷகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது,
கோவில்பட்டியில் மாநில மாணவர் ஆக்கிபோட்டி:இன்றைய 11 போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் விவரம்
முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்கள் பிரிவு மாநில ஆக்கி போட்டி கோவில்பட்டியில் நேற்று தொடங்கியது. இன்று இரண்டாம் நாள் போட்டிகள் நடைபெற்றன. காலையில் நடைபெற்ற முதல் போட்டியில் அரியலூர் மாவட்ட அணி 2-0 என்ற கோல் கணக்கில் தர்மபுரி மாவட்ட அணியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்ட அணி 2-0 என்ற கோல் கணக்கில் கடலூர் மாவட்ட அணியை தோற்கடித்தது., மூன்றாவது போட்டியில் மதுரை மாவட்ட அணி 7-0 என்ற கோல் கணக்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட […]
கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தினேஷ் ரோடி, இவர் பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்தார். தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை. இவரது மனைவி செளமியா, பாஜக வடக்கு மாவட்ட துணை தலைவராக உள்ளார். இந்நிலையில் தினேஷ் ரோடி இ.மெயிலுக்கு இன்று மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மெயில் அனுப்பியுள்ளார். அவரது வீட்டு பகுதியில் மூன்று RDX வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இன்று மாலை 6 மணிக்குள் வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. […]
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன். மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் […]
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ’வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ‘ரோடு ஷோ’ வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை […]
சென்னையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி இருக்கிறது. பல்வேறு பெயரிலான இ-மெயில் முகவரிகளில் இருந்து முக்கிய பிரமுகர்களின் இல்லங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்துக் கொண்டே உள்ளார். அந்த வகையில் இ-மெயில் மூலமாக நேற்று இரவு சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி.யின் வீடு, மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீடு, முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் வீடு, ஆழ்வார்பேட்டை […]
கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. கனத்த சத்தத்துடன் இடி மின்னலுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் வரை மழை வெளுத்து வாங்கியது. கனமழையால் வார்டு கோவில்பட்டி கருணாநிதி நகர் 3-வது தெரு பகுதியில் டீ வியாபாரம் செய்யும் நாராயணன் என்பவருக்கு சொந்தமான மண்சுவர் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. மேல்கூரையில் இருந்த ஓடுகள் அனைத்தும் சரிந்து விழுந்தன,] நல்ல வேலையாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை.நகர்மன்ற […]







