கோவில்பட்டியில் நேற்றைய மழைக்கு ஓட்டு வீடு இடிந்தது
கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. கனத்த சத்தத்துடன் இடி மின்னலுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் வரை மழை வெளுத்து வாங்கியது.
கனமழையால் வார்டு கோவில்பட்டி கருணாநிதி நகர் 3-வது தெரு பகுதியில் டீ வியாபாரம் செய்யும் நாராயணன் என்பவருக்கு சொந்தமான மண்சுவர் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. மேல்கூரையில் இருந்த ஓடுகள் அனைத்தும் சரிந்து விழுந்தன,]

நல்ல வேலையாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை.நகர்மன்ற உறுப்பினர் ஏஞ்சலா இது பற்றி கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து கிராம நீர்வாக அலுவலர் உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இடிந்து போன பார்வையிட்டு பாதிக்கப்பட்டவருக்கு அரசு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறி சென்றார்.
புரட்டாசி மாதத்தில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்த வேளையில் சரியான நேரத்தில் நேற்று மழை பெய்து இருக்கிறது. இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..







