கோவில்பட்டி பாஜக பிரமுகருக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தினேஷ் ரோடி, இவர் பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்தார். தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை. இவரது மனைவி செளமியா, பாஜக வடக்கு மாவட்ட துணை தலைவராக உள்ளார்.
இந்நிலையில் தினேஷ் ரோடி இ.மெயிலுக்கு இன்று மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மெயில் அனுப்பியுள்ளார்.
அவரது வீட்டு பகுதியில் மூன்று RDX வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இன்று மாலை 6 மணிக்குள் வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து வந்த புகாரின் பேரிலே தூத்துக்குடி மாவட்ட வெடிகுண்டு கண்டறிதல், அகற்றல் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரவேல் தலைமையிலான போலீசார் தினேஷ் ரோடி வீட்டில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர்.
மேலும் வீட்டின் அருகில் உள்ள பகுதி மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு கார்களில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு பொருள் எதுவும் சிக்கவில்லை. வேண்டுமென்றே யாரோ புரளி கிளப்பி இருப்பது தெரியவந்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் இ மெயில் அனுப்பியது என்று தீவிர விசாரணை நடக்கிறது.







