கோவில்பட்டியில் மாநில மாணவர் ஆக்கிபோட்டி:இன்றைய 11 போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் விவரம்
வேலூர் -தேனீ அணிகள் மோதலில் பரபரப்பான் காட்சி.
முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்கள் பிரிவு மாநில ஆக்கி போட்டி கோவில்பட்டியில் நேற்று தொடங்கியது. இன்று இரண்டாம் நாள் போட்டிகள் நடைபெற்றன.
காலையில் நடைபெற்ற முதல் போட்டியில் அரியலூர் மாவட்ட அணி 2-0 என்ற கோல் கணக்கில் தர்மபுரி மாவட்ட அணியை வீழ்த்தியது.
இரண்டாவது போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்ட அணி 2-0 என்ற கோல் கணக்கில் கடலூர் மாவட்ட அணியை தோற்கடித்தது.,

மூன்றாவது போட்டியில் மதுரை மாவட்ட அணி 7-0 என்ற கோல் கணக்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
நான்காவது போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட அணி 4-2 என்ற கோல் கணக்கில் கன்னியாகுமரி மாவட்ட அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.
ஐந்தாவது போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட அணியும் திருவாரூர் மாவட்ட அணியும் விளையாடிய போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது,இதில் 6-4 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை மாவட்ட அணி வெற்றி பெற்றது
ஆறாவது போட்டியில் சேலம் மாவட்ட அணி 3-1 என்ற கோல் கணக்கில் சிவகங்கை மாவட்ட அணியை வெற்றி பெற்றது .
ஏழாவது போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணி 6–0 கோல் கணக்கில் நீலகிரி மாவட்ட அணியை வீழ்த்தியது,.
எட்டாவது போட்டியில் கோயமுத்தூர் மாவட்ட அணி 4-0 கோல் கணக்கில் கரூர் மாவட்ட அணியை வெற்றி பெற்றது

ஒன்பதாவது போட்டியில் ஈரோடு மாவட்ட அணி 3- 0 என்ற கோல் கணக்கில் தென்காசி மாவட்ட அணியை தோற்கடித்தது,.
பத்தாவது போட்டியில் விருதுநகர் மாவட்ட அணி 2-0 என்ற கோல் கணக்கில் செங்கல்பட்டு மாவட்ட அணியை வீழ்த்தியது
பதினொன்றாவது போட்டியில் வேலூர் மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் தேனி மாவட்ட அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது







