கோவில்பட்டியில் பள்ளி மாணவர் ஆக்கி: தூத்துக்குடி உள்பட 8 மாவட்ட அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட வாரியாக பள்ளி மாணவர்கள் அணிகள் பங்கேற்கும் மாநில போட்டி கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது.
செயற்கை புல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. முதல் போட்டியாக ராமநாதபுரம் மாவட்ட அணி 5-0 என்ற கோல் கணக்கில் திருவண்ணாமலை மாவட்ட அணியை வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அணி 4-1 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை மாவட்ட அணியை வீழ்த்தியது.

மூன்றாவது ஆட்டத்தில் அரியலூர் மாவட்ட அணி 5-0 என்ற கோல் கணக்கில் சேலம் மாவட்ட அணியை வென்றது,
நான்காவது ஆட்டத்தில் மதுரை மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட அணியை தோற்கடித்தது.
ஐந்தாவது ஆட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட அணி 6-0 என்ற கோல் கணக்கில் கோயம்புத்தூர் மாவட்ட அணியை தோற்கடித்தது.
ஆறாவது ஆட்டத்தில் வேலூர் மாவட்ட அணியும் தஞ்சாவூர் மாவட்ட அணியும் விளையாடின. இறுதி வரை யாரும் கோல் போடவில்லை. இதனால் டிராவில் முடிந்ததால் டை- பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது இதில் வேலூர் மாவட்ட அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

ஏழாவது ஆட்டத்தில் விருதுநகர் மாவட்ட அணி 5-3 என்ற கோல் கணக்கில் ஈரோடு மாவட்ட அணியை தோற்கடித்தது.
எட்டாவது ஆட்டத்தில் திருச்சி மாவட்ட அணி 5-1 என்ற கோல் கணக்கில் நாமக்கல் மாவட்ட அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் ராமநாதபுரம் , தூத்துக்குடி , அரியலூர், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், வேலூர் திருச்சிராப்பள்ளி மாவட்ட அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.







