ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு மாதமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று 49 வது அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி இலுப்பையூரணி அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதி கோவிலில் வைத்து பொங்கல் பிரசாதம் அன்னதானம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை தலைவரும் கழுகுமலை காமினி மோட்டார்ஸ் பைனான்ஸ் அதிபருமான ஜெயக்கொடி வரவேற்றார்.. மிலிட்டரி சந்திரசேகர், அரசு ஒப்பந்ததாரர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆசிரியர் ஜீவானந்தம், திரைப்பட நடிகர் ரத்தன் மௌலி, சினிமா டைரக்டர் சகா பாண்டியன், ஏழாயிரம்பண்ணை பாண்டியன், வரதராஜன், ராஜன்,கோவில்பட்டி பிள்ளையார் நத்தம் விஏஓ மந்திர சூடாமணி பொங்கல் பிரசாதம் வழங்கினர்,
விளாத்திகுளம் வட்டாட்சியர் ( பணி நிறைவு ) பாஸ்கரன் அன்னதானத்தை தொடக்கி வைத்தார்.. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பாலமுருகன், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். மகாலட்சுமி ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளர் காளிராஜ் நன்றி கூறினார்.







