வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வி அடைபவருக்கு மாதம் ரூ. 200 , பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு மாதம் ரூ,.300, பிளஸ் 2 […]







