கோவில்பட்டி அருகே கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தில் கட்டப்பட்ட 72 வீடுகள்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் குலசேகரபுரம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2024-25-ன் கீழ் ரூ.2.23 கோடி செலவில் கட்டப்பட்ட 72 வீடுகள் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, புதிய வீடுகளை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். மேலும், பயனாளிகளிடம் வீடுகளின் சாவியை ஒப்படைத்தார்.

விழாவில், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, சார் ஆட்சியர் ஹூமான்சூ மங்கள், நகர்மன்ற தலைவர் கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டீபன் ரத்தினகுமார், முத்துக்குமார்,திமுக ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன்,ஜெயகண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், பீட்டர், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் குருராஜ்,மாதேஸ்வரன், முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு வக்கீல் பழனிக்குமார், மாவட்ட பிரதிநிதிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.







