மாநில மாணவர் ஆக்கி : லீக் முறையில் அரை இறுதிபோட்டி

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில மாணவர் ஆக்கி போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடந்து வருகிறது,. போட்டியின் நான்காவது நாளான இன்று காலையில் காலிறுதி போட்டிகள் நடைபெற்றன,
முதலாவது கால் இறுதிப் போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட அணி 2-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி மாவட்ட அணியை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது
இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் மதுரை மாவட்ட அணி 5-2 என்ற கோல் கணக்கில் அரியலூர் மாவட்ட அணியை வீழ்த்தியது
மூன்றாவது கால் இறுதி போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் விருதுநகர் மாவட்ட அணியை தோற்கடித்தது.
நான்காவது கால் இறுதி போட்டியில் திருச்சி மாவட்ட அணி 6-0 என்ற கோல் கணக்கில் வேலூர் மாவட்ட அணியை வெற்றி பெற்றது

இன்று மாலை நடைபெற்ற அரை இறுதிப்போட்டி லீக் முறையில் நடத்தப்பட்டது லீக் போட்டியின் முதல் போட்டியாக ராமநாதபுரம் மாவட்ட அணி 4-1 என்ற கோல் கணக்கில் மதுரை மாவட்ட அணியை வென்று மூன்று புள்ளிகள் பெற்றுள்ளது
இரண்டாவது லீக் போட்டியில் திருச்சி மாவட்ட அணி 3-2 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி மாவட்ட அணியை வெற்றி பெற்று மூன்று புள்ளிகள் பெற்றுள்ளது
நாளை மாலை நடைபெறும் லீக் போட்டியின் இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் அணிக்கு முதல் பரிசாக 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இரண்டாவது பரிசாக 9 லட்சம் ரூபாய், மூன்றாவது பரிசாக 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது







