நடைமுறை ஆங்கிலபேச்சு பயிற்சிப்பட்டறை தொடக்கம்
கோவில்பட்டி ரோட்டரி கிளப் மற்றும் சொர்ணா இன்ஸ்டியூட் இணைந்து நடைமுறை ஆங்கிலபேச்சு பயிற்சிப்பட்டறை 3 நாட்கள் நடத்துகிறது.அதன் தொடக்க விழாவுக்கு மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார்.
ரோட்டரி கிளப் தலைவர் ராஜ்குமார்,தாளாளர் ஜேபின்ஜோஸ் குத்துவிளக்கு ஏற்றினர். முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர்கள் முத்து செல்வம்,சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். செயலாளர் பழனிக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

நர்சிங் மாணவிகள் 150 க்கும் மேற்பட்டோர்,ஆசிரியர்கள் கலந்துகொண்டார்கள். தாய்மையின் மகத்துவம் குறித்து பேசிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ரோட்டரி உறுப்பினர்கள் பூல்பாண்டி, கண்ணன், மணி,இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.பயிற்சி பட்டறையை சாம்ராஜ் நடத்தினார்.







