வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வி அடைபவருக்கு மாதம் ரூ. 200 , பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு மாதம் ரூ,.300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவருக்கு மாதம் ரூ 400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்புச் சொல் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது
இத்தொகை நேரடியாக மனுதாரர்களது ஆதார் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும் தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் 45 வயதுக்கு மிகவும் 40 வயதுக்கு மிகவும் இருத்தல் வேண்டும்
மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ஆக இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ மாணவியருக்கு இவ் உதவி தொகை வழங்கப்படமாட்டாது எனினும் தொலைதூர கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம் .
ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற 4 ம் தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்திற்கு அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு பெற்றோர் உதவித்தொகை மேலும் பிற அரசு அலுவலகம் வாயிலாக எந்தவிதமான உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ 600 வீதமும் ,பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ 750 ,பட்டதாரிகளுக்கு ரூ.1,௦௦௦ வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை ஒரு அரசின் எந்த உதவித்தொகை பெறாதவராகவோ எந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவர் ஆகவோ மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன் பெறாதவர் எனில் மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் இந்த உதவி தொகை பெறுவதற்கு அனைத்து கல்வி சான்றுகள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் கோரம்பள்ளம் தூத்துக்குடியில் நேரில் விண்ணப்பிக்கவும்.
மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் உதவித்தொகை பெறுவதால் வேலுவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது .
மேற்கண்டவாறு ஆட்சியர் இளம் பகவத் கூறி உள்ளார்.







